Breaking News

3 ஆண்டுகளாக காக்கா கூட்டில் இருந்த தங்க வளையல் உரிமையாளரை லை தேடி கண்டுபிடித்து ஒப்படைத்த அன்வர் நடந்தது என்ன

அட்மின் மீடியா
0

3 ஆண்டுகளாக காக்கா கூட்டில் இருந்த தங்க வளையல் உரிமையாளரை லை தேடி கண்டுபிடித்து ஒப்படைத்த அன்வர் நடந்தது என்ன 

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், மஞ்சேரி திருக்கலங்கோடு பகுதியை சேர்ந்த சரத் என்பவரின் மனைவி ஹரிதா 2022 ம் ஆண்டு வீட்டின் குளியல் அறை அருகே, துணி துவைப்பதற்காக கையில் அணிந்திருந்த, 1.5 சவரன் எடை கொண்ட தங்க வளையலை, கழற்றி வைத்தபோது அங்கு வந்த காகம், திடீரென அந்த வளையலை கவ்விச் சென்றது.



இந்நிலையில், கடந்த மாதம் ஹரிதா வீட்டின் அருகே உள்ள அன்வர் சதாத். இவரது வீட்டின் மாமரத்தில் கட்டப்பட்டிருந்த காக்கை கூடு கீழே விழுந்த போது, அதில் தங்க வளையல் ஒன்று மூன்று துண்டுகளாக கிடந்துள்ளது. 

தங்க வளையல் உரியவரிடம் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நுாலக செயலர் பாபுராஜிடம் வளையலை ஒப்படைத்தார்.

காகத்தின் கூட்டில் இருந்து வளையல் கிடைத்தது குறித்து, கடந்த மே மாதம் நோட்டீஸ் வாயிலாக நுாலக நிர்வாகத்தினர் அறிவித்தனர்.தக்க ஆவணங்களுடன் வருவோருக்கு வளையல் வழங்கப்படும் என அதில் தெரிவித்திருந்தனர்.

தகவல் அறிந்த ஹரிதாவும் அவரது குடும்பத்தினரும், வளையல் வாங்கிய பில், வளையல் அணிந்த புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து, நேற்று முன்தினம் வளையலை பெற்றனர்.

வளையலை எடுத்துக் கொடுத்து முன்மாதிரியாக செயல்பட்ட அன்வரை அனைவரும் பாராட்டினர்.



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback