21 ம் தேதிவரை கனமழை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
வங்கக்கடலில் தொடர் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் நேற்று லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
அதனால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை 16, 17ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதேபோல 18, 19ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மேற்கண்ட நாட்களுக்கு அந்த பகுதிகளுக்கு ''ரெட் அலர்ட்'' எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.