Breaking News

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி உடனடியாக பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி உடனடியாக பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான்அறிவிப்பு


ஈரானின் ஃபர்தோ, நாடன்ஸ், எஸ்ஃபாஹனில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு.

தாக்குதலை வெற்றிகரமாக நடத்திவிட்டு அனைத்து போர் விமானங்களும் அங்கிருந்து வெளியேறியதாகவும், வேறு எந்த நாட்டு ராணுவமும் செய்யாத ஒன்றைச் செய்திருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி உடனடியாக பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான்அறிவிப்பு

முதற்கட்டமாக அமெரிக்காவின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் அறிவிப்பு அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும் எச்சரிக்கை

தங்களது நிலத்தை ஆக்கிரமித்து தங்களின் வாழ்வை நாசப்படுத்தியவர்களுக்கு எதிராக போராடும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உண்டு

பாலஸ்தீனர்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்கு உதவுவதும் நியாயமானது; அந்த வகையில் இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் நியாயமானது தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் தற்போது நடத்திய தாக்குதல் என்பது சிறிய தண்டனைதான் என ஈரான்அறிவிப்பு

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback