Breaking News

பண்ருட்டி அருகே கொடூரம் 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் - குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்

அட்மின் மீடியா
0

பண்ருட்டி அருகே நடைபயிற்சி சென்ற 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் - குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்



கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி நேற்று மாலை அந்த கிராமத்தில் நடை பயிற்சி சென்றபோது அங்கு மது அருந்தி கொண்டிருந்த நபர், அவரை சவுக்கு தோப்பிற்கு அழைத்துச் சென்று வாயில் மண்ணை போட்டு காது மற்றும் மூக்கில் உள்ள நகைகளை பறித்து பாலியல் பலாத்காரம் செய்து மூதாட்டி அணிந்திருந்த ¾ பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்

அந்த வழியாக சென்ற பொதுமக்கள், மூதாட்டி படுகாயத்துடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்பு மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று குற்றவாளியை சுட்டுப்பிடித்தனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடலூர் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது 

பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார் இதனை தொடர்ந்து அந்த மூதாட்டியை மீட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் பண்ருட்டி அடுத்த எஸ்.கே. பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இன்றைக்கு காலையில் காடாம்புலியூர் அருகே இருக்கக்கூடிய ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் தெரியவந்ததையடுத்து, அங்கு இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் குபேந்திரன், ஹரிஹரன் ஆகியோர் சுந்தரவேல் பதுங்கி இருந்த இடத்திற்கு சென்றனர். அப்போது பதுங்கி இருந்த சுந்தரவேலை பிடிக்க முயற்சி செய்தனர். 

அப்போது அவர் கையில் இருக்கக்கூடிய கத்தியை வைத்து மிரட்டி வெட்ட வந்தார். அப்போது இன்ஸ்பெக்டர் எச்சரித்தார். அதையும் மீறி அவர் வந்து குபேந்திரன் என்ற காவல் காவலரை கையில் வெட்டினார். 

அப்போது போலீசாரை தற்காக்கும் பொருட்டு போலீசார் சுந்தரவடிவேல் காலில் முட்டியில் சுட்டு பிடித்தார். மேலும் சுந்தர வடிவேலையும் அந்த காவலரையும் கொண்டு வந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த சுந்தரவேல் மீது தமிழக முழுவதும் நான்கு கொள்ளை வழக்குகள் உள்ளது. மேலும் சிறை சென்று இரண்டு நாட்கள் முன்புதான் இங்க வெளிவந்திருக்கிறார். 

நேற்று மதுபோதையில் இந்த நிகழ்வு நடைபெற்ற உள்ளது மேலும் மேற்கொண்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback