21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 9-ம் தேதி புதுச்சேரியில் பந்த்..! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஜூலை 9-ம் தேதி  புதுச்சேரியில் பந்த்..! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு



நாடு தழுவிய அளவில் வரும் ஜூலை 9-ம் தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. 

21 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி வரும் ஜூலை 9-ம் தேதி வேலை நிறுத்த பந்த் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக வரும் 23, 24, 25 ஆகிய தினங்களில் அனைத்து நிறுவனங்களுக்கும் ஆதரவு கேட்டு கடிதம் கொடுப்பது, வரும் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடத்துவது, ஜூலை 3, 4, 5 ஆகிய தேதிகளில் புதுச்சேரி முழுவதும் வேலை நிறுத்த பந்த் போராட்டத்தை விளக்கி வாகன பிரச்சாரம் நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback