மத்திய அரசின் இலவச சமையல் சிலிண்டர் வாங்க ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?முழு விவரம் ujjwala yojana free gas cylinder apply online
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒன்று பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா. இத்திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி கேஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு விண்ணப்பிக்க http://www.pmuy.gov.in என்ற அதிகாரபூர்வ தளத்தில் சென்று உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- வறுமைக் கோட்டிற்கு (BPL) கீழ் உள்ளவர்களாக இருக்கவேண்டும்
- பயனாளி பெண் அங்கத்தினராக இருத்தல் வேண்டும்.
- அக்குடும்பத்தில் உள்ள மற்ற நபர் யாரும் எரிவாயு இணைப்பு பெற்றிருக்கக் கூடாது.
- குடும்ப அட்டையில் பயனாளியின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
- பயனாளி நிரந்தரமாக அதே இருப்பிடத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
- பயனாளியின் வீட்டு சமையல் அறையில் மேடை இருத்தல் வேண்டும். அல்லது மேடை அமைக்க முன் வரவேண்டும்.
- 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் உள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்
- குடும்ப அட்டை
- ஜன்தன் வங்கிக் கணக்கு,
- ஆதார் எண்
https://pmuy.gov.in/
முதலில் https://www.pmuy.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்
அடுத்து அதில் Apply for PMUY Connection என்ற லிங்கைக் கிளிக் செய்யவும்.
அடுத்து இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று கேஸ் ஏஜென்சி விருப்பங்களைக் காண்பிக்கும் அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
அடுத்து New Connection" என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்து Type of Connection என்பதில் Ujjwala 2.0 New Connection என்பதை கிளிக் செய்யவும்
அடுத்து உங்கள் அருகிலுள்ள விநியோகஸ்தரைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பப் படிவத்தை கவனமாக நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றி, "Submit" கொடுத்து விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள எரிவாயு நிறுவனத்தில் சமர்ப்பிக்கவும்.
Tags: முக்கிய செய்தி