Breaking News

இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்து சமய அறநிலையத் துறையில், சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள 6 (ஆறு) அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, இத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விரிவான விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள தகுதிகளைப் பெற்றுள்ள இந்து மதத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 



மேற்கண்ட பதவிக்கான தகுதிகளையும் http://hrce.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE), சென்னை அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பணி:-

அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி :-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். 

வயது வரம்பு:-

(01.07.2024 தேதியின்படி) குறைந்த பட்சம் 18 வயது 

பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 வயது வரை, 

பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 34 வயது வரை, 

மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் 

மாத சம்பளம்:-

தமிழ்நாடு அரசு நிர்ணயித்த ஊதிய விகிதத்தின்படி, மாதம் ₹15,700 முதல் ₹58,100 வரை சம்பளம் வழங்கப்படும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

28.05.2025- மாலை 5.45 மணி வரை

தபால் முகவரி:-

ஆணையர்,

இந்து சமய அறநிலையத்துறை, 

எண்.119, உத்தமர் காந்தி சாலை, 

நுங்கம்பாக்கம், 

சென்னை-600 034

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/231/document_1.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback