Breaking News

குட்டியைப் பாதுகாக்க புலியிடம் சண்டையிட்ட தாய் கரடி வீடியோ Mother bear fight of Tiger

அட்மின் மீடியா
0

இந்தியாவில் உள்ள ஒரு காட்டில் தனது குட்டியைப் பாதுகாக்க ஒரு தாய் கரடி ஒரு ராயல் பெங்கால் புலியிடம் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது

உலகில் உள்ள எந்த சக்தியும் ஒரு தாயின் அன்புக்கும் வலிமைக்கும் முன்னால் பலவீனமாகிவிடும் என்பதற்க்கு சான்றாக இந்த வீடியோ உள்ளது

இந்த வீடியோ சரியாக எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை , ஒரு சிலர் ஆந்திரா காட்டில் என்றும் கர்நாடக காட்டில் என்றும் சத்திஸ்கர் மாநில காடு என்றும் இந்த வீடியோ பரவிவருகின்றது

வைரல் ஆகும் அந்த வீடியோவில் ஒரு பெண் கரடி தனது குட்டி கரடியை காப்பாற்ற காட்டின் மிகவும் ஆபத்தான வேட்டையாடும் புலியுடன் சண்டையிடுகின்றது

புலி, கரடி குட்டியை தாக்க முற்பட்டது. ஆனால் தாய்க்கரடி சிறிதும் அஞ்சாமல், புலியுடன் போராடி, தன் குட்டிகளை காப்பாற்றியது. கரடிக்கும், புலிக்கும் நடந்த மோதலை, சிலர் மொபைலில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர் இது வைரலாக பரவியுள்ளது.


Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback