புரூக்ளின் பாலத்தில் மோதிய மெக்சிகன் கப்பல் அதிர்ச்சி வீடியோ brooklyn bridge crash
வட அமெரிக்க நாடான மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான குவாஹ்டெமோக் என்ற கப்பல், 277 பேருடன், கப்பல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்லின் நகருக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 277 பேர் பயணித்தனர்.
நல்லெண்ண அடிப்படையில் 15 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்த கப்பல், நியூயார்க் நகரின் முக்கிய அடையாளமான புரூக்ளின் தொங்கு பாலத்தின் மீது நேற்று முன்தினம் இரவு மோதியது.
கப்பலின் உயரமான கொடி மரம், புரூக்ளின் பாலத்தின் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.இந்த சம்பவத்தில் கப்பலில் பயணித்த 2 பேர் உயிரிழந்தனர் 19 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதில் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1924270990215012387