அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு ”சக்தி” என பெயர் வைப்பு - முழு விபரம் இதோ
தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.
மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா - வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு கர்நாடக உட்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ஆம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும். என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
இப்புயலிற்கு இந்திய வானிலை மையம் சக்தி Shakthi என்று பெயரிட உள்ளது.இப்புயலின் காரணமாக கேரளா தமிழ்நாடு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மே 24ம் தேதி துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் வரும் 25-ம் தேதி வரை ஒரு சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
Tags: தமிழக செய்திகள்