Breaking News

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 28ம் தேதி தீர்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே.28ம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாணவி புகார் அளித்த நிலையில் 5 மாதங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக மாணவருடன் பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த ஞானசேகரன் என்ற நபர் அந்த மாணவரை அடித்து துரத்தி விட்டு அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதனை சென்னை மகளிர் நீதிமன்றம் குறிப்பு எடுத்துள்ளது. 

இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழக மாணவி வழக்கில் வரும் மே 28-ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback