Breaking News

மீண்டும் பரவும் கொரோனா தமிழ்நாட்டில் 18 பேருக்கு பாதிப்பு -பீதியடைய வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மீண்டும் பரவும் கொரோனா தமிழ்நாட்டில் 18 பேருக்கு பாதிப்பு -பீதியடைய வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவிப்பு COVID19 Pandemic



ஆசிய நாடுகளில் தற்போது புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதில் சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், சேலம் மாவட்டம், தாதகாபட்டியில் 4 பேருக்கும், இதேபோல மற்ற பகுதிகளில் 5 பேருக்கும் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 20 பேருக்கு ரத்தம் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது, ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. வீரியமில்லாத கொரோனா என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்படவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback