Breaking News

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!! 





நடைபெறவிருக்கும் ஜூலை 2025. மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுத ஆன்-லைன் வழியாக 22.05.2025 (வியாழக் கிழமை) முதல் 04.06.2025 ( புதன் கிழமை) மாலை 5.00 மணிக்குள் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலும் / தனித் தேர்வர்கள் சேவை மையங்களுக்கும் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும். மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் 05.06.2025 (வியாழக் கிழமை) மற்றும் 06.06.2025 (வெள்ளிக் கிழமை) வரையிலான நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும் என பார்வையில் காணும் செய்திக்குறிப்பின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அனுமதிக் கட்டணம் খচ-1000/- (2024-2025-

கல்வியாண்டில் அரசு மற்றும் முழுமையான அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சிப்பெறாத / வருகைப்புரியாத மாணவர்களுக்கு இக்கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது)

ஜூலை 2025, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பிக்கும் தேர்வர்களின் விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வது தொடர்பான சேவை மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வெழுத விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள் இக்கடிதத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. ஆகியவை

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கும் / தனித்தேர்வர்கள் சேவை மையங்களுக்கும் 22.05.2025 முதல் வருகை புரிவார்கள். அவ்வாறு வருகை புரிவோருக்கு கீழ்க்கண்டவாறு ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளிகள் / சேவை மையங்களின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

. 22.05.2025 11.00 மணி முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கும் / தனித்தேர்வர்கள் சேவை மையங்களுக்கும் வருகைபுரிவார்கள். அவ்வாறு வருகைபுரிவோரிடம் அவர்கள் மார்ச் 2025 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) அல்லது மதிப்பெண் பட்டியலினை (Statement of Marks) ஆய்வு @ www.dge.tn.gov.in 60m website- பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி, தேர்வர்களின் விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2. www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, Higher Secondary Examination என்ற வாசகத்தினை Click செய்து மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களைப் பெறுதல் தொடர்பாக, மேல்நிலை முதலாம் ஆண்டு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் மற்றும் +1 பழைய பாடத் திட்டத்திற்கு இணையாக புதிய பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் (+1 Equivalent Subjects) தொடர்பான பட்டியல் ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

3. மேல்நிலை முதலாமாண்டு தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள் மற்றும் அதன் இணைப்புப் பட்டியல் ஆகியவற்றை சேவை மையங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டவேண்டும்.

4. 2025 துணைத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை பெறுவதற்கு கடைசி நாளான 04.06.2025/ 06.06.2025 की நாட்களில் அனைத்து விண்ணப்பங்களையும் பெற்று பதிவேற்றம் (Uploading) @ . Report Section Multiple report-gg Click தேர்வர் வகை வாரியான விவரங்களையும். கட்டணம் தொடர்பான விவரங்களையும் பதிவிறக்கம் (Downloading) செய்ய வேண்டும்.

5. பின்னர் அதனடிப்படையில் விண்ணப்பிக்க வருகைபுரிந்த மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையினை, தேர்வு விண்ணப்பத் தொகை (தக்கல் கட்டணம் உட்பட) (Exam Fees + Others Fees) எனவும். அரசாணை(2டி) எண்.42, பள்ளிக் கல்வி(அ.தே)த் துறை, நாள்.11.04.2023-ன்படி, பெறப்பட்ட ஆன்-லைன் கட்டணத் தொகை ரூ.70/-ல் (On-line Fees) சேவைமையங்களுக்கான சேவை கட்டணங்களுக்காகவும் /பராமரிப்பு செலவுகளுக்காகவும் ரூ.35/- ஐ வைத்துக் கொண்டு. மீதமுள்ள .35/- www.karuvoolam.tn.gov.in இணையதளத்திற்கு சென்று இணைப்பில் காணும் வழிமுறைகளை பின்பற்றி கீழ்க்காண் கணக்கு தலைப்பு மற்றும் துறை விவரங்களை பயன்படுத்தி தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் கட்டணத்தினை செலுத்திட வேண்டும்.அவ்வாறு கட்டணம் செலுத்தும் பொழுது கணக்குத் தலைப்புகளை சரிபார்த்து கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback