குவைத்தில் இருந்து இந்தியா திரும்பிய இளைஞர் விமானத்தில் மரணமடைந்தார் முழு விவரம் இதோ
அட்மின் மீடியா
0
குவைத்தில் இருந்து இந்தியா திரும்பிய இளைஞர் விமானத்தில் மரணமடைந்தார்
குவைத்திலிருந்து இந்தியா திரும்பும் வழியில் இந்திய இளைஞர் விமானத்தில் வைத்து மரணமடைந்தார். உயிரிழந்த இந்தியர் கேரளா மாநிலம், ஃபோர்ட் கொச்சி, பல்லுருத்தியை அடுத்த அரக்கல் பகுதியை சேர்ந்த அனூப்(32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த தினம் குவைத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக குவைத்திலிருந்து கொச்சிக்கு நேற்று(25/04/25) வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆனால் பயணத்தின் நடுவில், அவர் மீண்டும் விமானத்தில் வைத்து உடல் ரீதியான அசௌகரியத்தை அனுபவித்தை தொடந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உடல் தற்போது மும்பை அந்தேரியில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அப்பாசியா இந்தியன் சென்டிரல் பள்ளியின் ஊழியரான அனூப், ஆறு மாதங்களுக்கு முன்பு தான் ஆன்சி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
அனூப் உயிரிழந்த துயரமான செய்தி உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடந்து உடலை ஊருக்கு கொண்டு வர உறவினர் மும்பைக்கு புறப்பட்டு சென்றனர். உடலை வீட்டிற்கு கொண்டு வர உறவினர்கள் மும்பை மலையாளி அமைப்புகள் மற்றும் கேரளா அரசின் வெளிநாட்டு சேவைகளுக்கான நோர்கா துறையின் உதவியையும் நாடியுள்ளனர்.
https://www.facebook.com/photo/?fbid=694271382964915&set=a.197167426008649
Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்