தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரியாமல் ஜிப்லைனில் சிரித்தப்படி செல்லும் சுற்றுலா பயணி! அதிர்ச்சி வீடியோ...
தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரியாமல் ஜிப்லைனில் சிரித்தப்படி செல்லும் சுற்றுலா பயணி! அதிர்ச்சி வீடியோ...
பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலின்போது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அறியாமல் ஜிப்லைனில் சென்றபடியே வீடியோ எடுத்த சுற்றுலா பயணி
காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதில் 26 பேர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது, கீழே நடப்பது எது குறித்தும் எதுவும் தெரியாமல் சுற்றுலாப்பயணி ஒருவர் ஜாலியாக ஜிப்லைனில் சென்ற படியே செல்ஃபி வீடியோ எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
அந்த செல்ஃபி வீடியோவில் தீவிரவாதிகள் சுட்டதில் ஒருவர் குண்டடி பட்டு கீழே விழும் காட்சியும் பதிவாகியுள்ளது. தற்போது அந்த ஜிப்லைன் ஆப்பரேடருக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1916897614861357095
Tags: இந்திய செய்திகள்