Breaking News

முஸ்லிம்கள் ஏன் மேற்கு நோக்கி தொழுகிறார்கள்? இது மத சடங்கா ? Why do Muslims pray facing west

அட்மின் மீடியா
0
முஸ்லீம்கள் ஏன் மேற்கு நோக்கி தொழுகின்றார்கள்? இது  மத சடங்கா ? Why do Muslims pray facing west

முஸ்லிம்கள் ஒரே கடவுளை வணங்குவதாகக் கூறிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் மேற்குத் திசையைத் தான் வணங்குகின்றனர். எல்லாப் பள்ளிவாசல்களும் மேற்கு நோக்கித் தான் கட்டப்பட்டுள்ளன என ஓர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்

பதில்:-

இஸ்லாமியர்கள் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் அல்லது வேறு எதற்கும் தலைவணங்குவதும் இல்லை. 

உதாரணத்திற்கு இஸ்லாமியர்கள் இறைவனைத் தொழ விரும்பினால் –பலரும் கூட்டாகக் இணைந்து வணங்கும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி நின்றால் அதில் கட்டுப்பாடோ, ஒழுங்கோ இருக்காது. அனைவரும் ஒரே திசையை நோக்கியவர்களாக நின்றால் தான் அதில் ஒழுங்கு இருக்கும். 

ஒரு வீட்டில் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் தனித்தனியாக தொழும் போது கூட ஒழுங்கு அவசியமானது தான். ஒருவர் வடக்கு நோக்கியும், மற்றொருவர் தெற்கு நோக்கியும், இன்னொருவர் கிழக்கு நோக்கியும், வேறொருவர் மேற்கு நோக்கியும் தொழுதால் அதில் கூட ஒழுங்கின்மை தான் வெளிப்படும். இந்த ஒழுங்கை ஏற்படுத்துவதற்காகத் தான் ஏதாவது ஒரு திசையை நோக்குமாறு அனைவருக்கும் கட்டளையிட வேண்டி வருகிறது.

இறைவன் அல்லாஹ்வைத் தொழுவதில் கூட இஸ்லாமியர்கள் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இறைவனைத் தொழும்போது இஸ்லாமியர்கள் அனைவரும் சவூதி ஆரேபியாவில் உள்ள கஃபாவை முன்னோக்கி தொழவேண்டும் என குரான் ஆனில் கூறப்பட்டுள்ளது

அருள்மறை குர்ஆன் இரண்டாவது அத்தியாயத்தின் 144 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

(நபியே!.) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்.

மெக்காவில் உள்ள கஃபா உள்ள திசையை நோக்கியே உலகெங்கிலும் உள்ள  முஸ்லீம்கள் தொழுவார்கள்

கஃபாவிற்கு மேற்குப்புறத்தில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிழக்குத் திசையில் கஃபா இருப்பதால்) கிழக்குத்திசை நோக்கியும் கஃபாவிற்கு – கிழக்குத் திசையில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு மேற்குத் திசையில் கஃபா இருப்பதால்) மேற்குத் திசை நோக்கியும் தொழுவார்கள்

அதாவது இந்தியாவில் இருப்பவர்களுக்கு காபா மேற்குத் திசையில் இருப்பதால் மேற்கு நோக்கித் தொழுகின்றனர். சில நாடுகளில் இருப்பவர்களுக்கு இந்தத் திசைகள் மாறுபடும்போது அவர்கள் கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் அதாவது அவர்கள் நாட்டிலிருந்து காபா இருக்கும் திசையையே முன்னோக்கி தொழுகின்றார்கள்

முஸ்லிம்கள் கஃபாவின் திசையை நோக்கி தொழுதாலும் – கஃபாவை தொழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேற்கூறப்பட்ட கருத்தின் அடிப்படையில் இது மத சடங்கல்ல. இறைவனால் ஆக்கப்பட்ட கட்டளை என்று தெரிய வருகிறது.

மேலும் கீழே இணைத்துள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும் மெக்காவில் இருந்தால் கிழக்கு மேற்கு என்று இல்லை அனைவரும் காபாவை முன்னோக்கியே தொழுகின்றார்கள்.




Tags: மார்க்க செய்திகள்

Give Us Your Feedback