Breaking News

சொந்தமாக தொழில் தொடங்க - ட்ரோன் இயக்குவது எப்படி பயிற்சி அளிக்கும் தமிழக அரசு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் drone training chennai

அட்மின் மீடியா
0

சொந்தமாக  தொழில் தொடங்க - ட்ரோன் இயக்குவது எப்படி பயிற்சி அளிக்கும் தமிழக அரசு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் drone training chennai

Join us for a 3-Day Media Drone Training at EDII-TN Campus, Chennai on March 18, 19, & 20, 2025! 

Learn Professional Drone Handling

Master Aerial Photography & Videography

Get Certified by EDII-TN, Government of Tamil Nadu

Registration Fee: ₹6000 (Pre-registration required)

For Registration: 8668102600 | 7010143022Don't miss this chance to elevate your skills to new heights! 



தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன் இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்துகொண்டு ட்ரோன் இயக்கத்தை கற்றுகொள்ள முடியும். 

தமிழ்நாட்டில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் செயல்படுகிறது. பல்வேறு துறைகளில் சுயமாக தொழில் தொடக்க எளிமையான முறையில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது.

ட்ரோன் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். 

ஆண்கள், பெண்கள் இருவரும் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

சென்னையில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் 18.03.2025 முதல் 20.03.2025 தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்கப்படும் 

முன்பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-:-

https://www.editn.in/Web-Trainee-Registration?id=OUSYa9M6sPhFNCFa5Pb0uEx+f0N2AoFYhBVdHqd/dHU=

மேலும் விவரங்களுக்கு:-

8668108141/ 8668102600/ 7010143022 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். 

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈட்காட்டுத்தாங்கல், சென்னை - 600032 என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் சென்று விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback