Breaking News

வரி கட்டுபவர்களின் இமெயில், சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முழு அதிகாரம்! முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஏப்ரல் 1, 2026 முதல், வருமான வரித் துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுப்பிக்கப்பட்ட வருமான வரி மசோதா, 2025 ஐ கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.

புதிய வருமான வரி சட்டப்படி வருமான வரி செலுத்த வேண்டியவர்களின் தனிநபரின் வருமானம் மட்டுமின்றி, மின்னஞ்சல், சமூக வலைத்தள கணக்குகள்,  தனிப்பட்ட மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், ஆன்லைன் முதலீட்டுக் கணக்குகள், வர்த்தகக் கணக்குகள் மற்றும் என அனைத்தையும் சட்டப்பூர்வமாக அணுகுவதற்கு அதிகாரம் வழங்கி வருமான வரிச் சட்டம், 1961ல் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தற்போதுள்ள வருமான வரி சட்டம், 1961 இன் பிரிவு 132ன் கீழ் வருமான வரி ஏய்ப்பு செய்ய வேண்டுமென்றே வெளிப்படுத்தாத வருமானம், சொத்து அல்லது ஆவணங்கள் ஏதேனும் இருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் சொத்துக்கள் மற்றும் கணக்குப் புத்தகங்களை சோதனை நடத்தவும், பறிமுதல் செய்ய முடியும். 

அதேபோல் புதிய வருமான வரிச் சட்டம் பிரிவு 247-ன் கீழ்  வரி ஏய்ப்பு செய்வோரை கண்டறியவும், ஏமாற்றுவோரின் கணக்கு விவரங்களை அறிந்து கொள்ளவும் இத்தகைய அதிகாரம்இனி சமூக ஊடகக் கணக்குகள், தனிப்பட்ட மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், ஆன்லைன் முதலீட்டுக் கணக்குகளை ஆய்வு செய்ய முடியும்.

இந்திய அரசியலமைப்பு பிரிவு 19(1)(A)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்துக்குள் தலையிடும் அதிகாரமாக இது கருதப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு பிரிவு 21-ன் கீழ், குடிமக்கள் தங்கள் அந்தரங்க ரகசியங்களையும் பாதுகாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது

புதிய வருமான வரி மசோதா குறித்து தற்போது பல்வேறு கவலைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், வருகிற 2026-27 நிதியாண்டு முதல் அமலுக்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback