Breaking News

உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து டயட் இருந்த இளம் பெண் உயிரிழப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து டயட் இருந்த இளம் பெண் உயிரிழப்பு முழு விவரம்



கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநந்தா (வயது 18) இவரது உடல் எடை திடீரென அதிகரித்து குண்டாகி உள்ளார் இதனால் மன அவர் உடல் எடையை குறைக்க யூடியூப் வீடியோக்களை பார்வையிட்டுள்ளார். 

இதனை அடுத்து யூடியூப் வீடியோக்களில் கூறுவது போல் உணவு பழக்கத்தை மாற்றி டயட் இருந்துள்ளார் இதனால் அவர் உடல் எடை வெகுவாக குறைந்து மிகவும் மெலிந்து உடல் நிலை மிகவும் மோசமாகி உள்ளது.

இதனால் பயந்துபோன குடும்பத்தினர், அவரை கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனா்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர்பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல் எடையை குறைக்க குறைவாக உணவு சாப்பிட்டு வந்ததால் குடல் சுறுங்கியதால் ஸ்ரீநந்தா உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback