அமெரிக்க அதிபர் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பத்திரிக்கையாளர்கள் முன்பு கடும் வாக்குவாதம் வைரல் வீடியோ
அமெரிக்க அதிபர் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பத்திரிகயாளர்கள் முன்பு கடும் வாக்குவாதம் வைரல் வீடியோ
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார்.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.
மேலும் உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க அமெரிக்கா வந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் உற்சாகமாக வரவேற்றார்.
உக்ரைன்-ரஷ்யா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து ரஷ்ய அதிபர் புடினுடன் தொலை பேசியில் உரையாடினார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.
போரில் உக்ரைனுக்கு உத்தரவாதம் அளித்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார் என ஸெலன்ஸ்கி தெரிவிக்க, உத்தரவாதம் அளிக்க ட்ரம்ப் மறுத்துள்ளார்
அப்போது டிரம்ப் நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள்? நீங்கள் இந்த நாட்டை அவமதிக்கிறீர்கள்; 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டனர். அது மட்டும் இல்லை என்றால் போர் 1 வாரத்தில் முடிந்திருக்கும்.
ரஷ்யா உடன் போரில் உக்ரைன் வெல்லப்போவதில்லை. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியால் 3ம் உலக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு டிரம்ப் கடுமையாக சாடினார்.
பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும், வெள்ளை மாளிகையில் நடந்த விருந்தில் பங்கேற்காமலும் ஜெலன்ஸ்கி கிளம்பி சென்றார்.
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொன்லாடு ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1895664456916746652
Tags: வெளிநாட்டு செய்திகள்
