லண்டனில் 56 லட்சத்திற்கு ஏலம் போன இந்தியாவின் 100 ரூபாய் ஹஜ் நோட்டு முழு விவரம் HA 078400
அட்மின் மீடியா
0
லண்டனில் 56 லட்சத்திற்கு ஏலம் போன இந்தியாவின் 100 ரூபாய் ஹஜ் நோட்டு முழு விவரம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 100 ரூபாய் நோட்டு லண்டனில் ரூ.56,49,650க்கு ஏலம் போயுள்ளது.
இந்த 100 ரூபாய் கரன்சியானது 1950 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரிசை எண் HA 078400 கொண்ட நோட்டாகும். இந்த கரன்சிகள் ஹஜ் நோட்டுகள்' என அழைக்கப்படுகின்றன.
20ஆம் நூற்றாண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ளுபவர்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கி இந்த சிறப்பு கரன்சியை உருவாக்கியது. அந்த காலகட்டத்தில் வளைகுடா நாடுகளில் இந்த கரன்சி சட்டபூர்வமாக பயன்படுத்தப்பட்டது.
லண்டனில் நடந்த ஏலத்தில், ரூ.100 மதிப்புள்ள 'ஹஜ் நோட்டு' ரூ.56,49,650க்கு விற்கப்பட்டது, அ
ஹஜ் யாத்திரைக்காக வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு ரூபாய் நோட்டுக்கள் ஆகும்
ஹஜ் ரூபாய் நோட்டுகள் சீரியல் எண்ணில் உள்ள 'HA' என்ற எழுத்து மற்ற நோட்டுகளை வேறுபடுத்திக் காட்டப்பட்டன, இதனால் அவை மற்ற நாணயத் தாள்களிலிருந்து தனித்து நிற்கின்றன. கூடுதலாக, இந்த ரூபாய் நோட்டுகள் வழக்கமான இந்திய நாணயத்துடன் ஒப்பிடும்போது தனித்துவமான வண்ணத் திட்டத்தைக் கொண்டது
இந்த 100 ரூபாய் ஹஜ் நோட்டுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் போன்ற வளைகுடா நாடுகளில் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும்
Tags: வெளிநாட்டு செய்திகள்