ஆந்திராவில் மூன்றாவது குழந்தை ஆணாக பிறந்தால் பசுமாடு, பெண்ணாக பிறந்தால் ரூ.50,000 பரிசு என அறிவிப்பு
மூன்றாவது குழந்தை பெண் குழந்தையைப் பெற்றால் ரூ.50,000 வழங்கப்படும் -
ஆந்திரப் பிரதேச தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. காளிசெட்டி அப்பலா நாயுடு, மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த பெண்களுக்கு தலா ரூ.50,000 வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் அந்தக் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால், அவருக்கு ஒரு பசுவை தருவதாக அறிவித்தார்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விஜயநகரத்தில் உள்ள ராஜீவ் விளையாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் எம்.பி. காளிசெட்டி அப்பலா நாயுடு கலந்துகொண்டார்.அப்போது உரையாற்றிய அவர்,
மூன்றாவதாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும் அந்த பெண், ஆண் குழந்தை பெற்றால் பசு மாட்டு அவருக்கு பரிசாக வழங்கப்படும். இதற்கான நிதியுதவியை தனது ஊதியத்தில் இருந்து வழங்கப்படும். “ என்று தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பளநாயுடு, பத்திரிகையாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர்.அடிப்படை நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து தெலுங்கு தேசம் கட்சியினருக்குப் பயிற்சி அளித்து வந்தார். 51 வயதான இவர் தெலுங்கு தேசம் கட்சியில் 25 ஆண்டுகளாக உள்ளார்.இவர், விஜயநகரத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் வட ஆந்திரப் பயிற்சி நிறுவனத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்,
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
