ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் 30 நிமிடத்தில் 350 கிலோ மீட்டர் செல்லும் ஹைப்பர் லூப் ரயில் சென்னை ஐ.ஐ.டி சாதனை வீடியோ இணைப்பு
ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் 30 நிமிடத்தில் 350 கிலோ மீட்டர் செல்லும் ஹைப்பர் லூப் ரயில் சென்னை ஐ.ஐ.டி சாதனை வீடியோ இணைப்பு
மணிக்கு 1000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் உருவாக்கியுள்ள ஹைப்பர் லூப் ரயில் 422 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் ரயில் டிராக் சோதனைப் பாதையை அறிமுகப்படுத்தினார் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் 30 நிமிடத்தில் 350 கிலோ மீட்டர் செல்லலாம்
ஹைபர்லூப் என்பது வெற்றிட இரும்புக் குழாய்கள் வழியாக, ரயில்கள் எலக்ட்ரோ மேக்னடிக் தொழில் நுட்பத்தில் காற்றின் உராய்வு இன்றி, மேக் 1 வேகத்தில், அதாவது மணிக்கு 761 மைல் வேகத்தில் செல்லும்.
இந்த ரயில் போக்குவரத்துக்கான 422 மீட்டர் நீள பரிசோதனை வழித்தடத்தை ரயில்வே அமைச்சகம் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சென்னை ஐஐடி, அதன் தையூர் டிஸ்கவரி வளாகத்தில் உருவாக்கியுள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ள ரயில்வே அமைச்சர், ‘‘ ஹைபர்லூப் போக்குவரத்துக்கான 422 மீட்டர் பரிசோதனை வழித்தடம் தயார். ஹைபர்லூப் திட்டத்தை மேம்படுத்த ஏற்கெனவே இரண்டு கட்ட மானியமாக தலா 1 மில்லியன் டாலர் (ரூ.8.71 கோடி) வழங்கப்பட்டது. தற்போது 3-வது கட்ட மானியம் சென்னை ஐஐடிக்கு வழங்கப்படவுள்ளது’’ எனவும் முதல் கட்டமாக, 40 முதல் 50 கி.மீ. நீளத்துக்கு ஹைப்பர்லூப் காரிடார் அமைக்கத் திட்டம் உள்ளதாகவும், இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால், பெரியநகரங்களை இணைக்கும் வகையில் புதிய வழித்தடங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தத் தொழில்நுட்பம் மூலம், சென்னை முதல் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வெறும் 30 நிமிடங்களில் பயணம் செய்ய முடியும்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1895660195575185453
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
