Breaking News

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 - புதுச்சேரி பட்ஜெட் 2025-26 அறிவிப்புகள் என்ன என்ன முழு விவரம் Puducherry Budget

அட்மின் மீடியா
0

புதுச்சேரி பட்ஜெட் 2025-26 அறிவிப்புகள் என்ன என்ன முழு விவரம் PuducherryBudget

 2025 - 2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வைக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

₹13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்றினார்


  • விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ₹2,000 வழங்கப்படும் 
  • ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியுடன், இரண்டு கிலோ இலவச கோதுமை வழங்கப்படும்.
  • அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.
  • வாரம் 3 நாள் வழங்கப்படும் முட்டை, இனி வாரந்தோறும் வழங்கப்படும்-முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
  • புதுச்சேரியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை Post 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு 1000 ஊக்கத்தொகை புதுச்சேரி அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு
  • புதுச்சேரியில் உள்ள 2 அருங்காட்சியங்கள் மத்திய அரசின் உதவியுடன் புரணமைக்கப்படும்.
  • முதியோர் உதவி பெறும் மீனவ பெண்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு தொகை ரூ.20 ஆயிரமாக உயர்வு
  • கிழக்கு கடற்கரை சாலையில் புதியதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்படும்
  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வரும் நிதிஆண்டு முதல் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்..
  • சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்தப்படும்.
  • புதுச்சேரி மாநிலத்தில், குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உதவித் தொகை ரூ.1,000, தற்போது ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
  • திருமணம் ஆகாத 30 வயது முடிந்த ஆதிதிராவிடர் பழங்குடியின பெண்களுக்கு மீதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும்.
  • மாற்றுதிறனாளி ஈமச்சடங்கு நிதி ரூ.15,000 லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • 1 முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மாற்றுதிறனாளி மாணவர்களின் ஆண்டு உதவித்தொகை ரூ. ஆயிரத்திலிருந்து ரூ.4000 ஆகவும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுதிறனாளி மாணவர்களின் ஆண்டு உதவித்தொகை ரூ.2000 லிருந்து ரூ.5000 ஆகவும், 9 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாற்றுதிறனாளி மாணவர்களின் ஆண்டு உதவித்தொகை ரூ.3400 லிருந்து ரூ.6400 ஆகவும் உயர்வு

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback