13, 14 ம் தேதி சந்திர கிரகணம் சிகப்பு கலரில் தெரியும் நிலா முழு விவரம் Blood Moon tamil
13, 14 ம் தேதி சந்திர கிரகணத்தில் சிகப்பு கலரில் தெரியும் நிலா முழு விவரம் Blood Moon tamil
வரும் 13, 14ம் தேதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு ஏற்படுகிறது. இது Blood Moon எனப்படுகிறது!
ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது. 2022க்கு பிறகு தற்போது 2 நாட்கள் இந்த நிகழ்வு வருகிறது. இந்த கிரகணம் சுமார் 5 மணி நேரம் நீடிக்கும்.
அறிவியல் ரீதியாக சந்திர கிரகணம்:-
சூரியன் மற்றும் சனிக்கு ஒரே நேர் கோட்டில் பூமி வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழக்கூடிய நேரத்தில் பூமி சந்திரனை மறைப்பதால், சூரியனின் ஒளியை நேரடியாக பெற இயலாத நிலையில் மங்கலான சந்திரன் தோன்றும். இந்த நிகழ்வு தான் சந்திர கிரகணம் ஆகும்.
சந்திர கிரகணம் 2025
மார்ச் 13ம் தேதி சந்திர கிரகணம் சர்வதேச நேரப்படி நள்ளிரவு 3.57 மணிக்கு ஏற்படுகிறது.
அதுவே இந்திய நேரப்படி மார்ச் 14ம் தேதி காலை 9.27 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 15.30 சந்திர கிரகணம் முடிவடைகிறது.
இந்த கிரகணத்தின் உச்ச நேரமாக நண்பகல் 12.28 மணிக்கு ஏற்படுகிறது.
சந்திர கிரகணம் வட அமெரிக்காவின் அனைத்து நாடுகளிலும், தென் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் நன்றாக தெரியும். ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள், மேற்கு ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியா, பிஜி தீவுகள், ஜப்பான், கிழக்கு ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கிரகணத்தைப் பார்க்க முடியும். இந்த
கிரகணம் இந்திய நேரப்படி பகல் நேரத்தில் நடப்பதால், இந்தியாவில் பார்க்க இயலாது.
Tags: வெளிநாட்டு செய்திகள்