Breaking News

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! 1 to 9th annual exam time table 2025

அட்மின் மீடியா
0

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! 1 to 9th annual exam time table 2025

அரசு /அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 5ஆம் வகுப்பு மற்றும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2024-25ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை தொடக்க / நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வரும் ஏப்ரல் 8-ம் தேதி முதல் முழு ஆண்டு தேர்வு தொடங்குகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு கட்டமாகவும், 6 முதல் 9-ம் வகுப்பு வரை ஒரு கட்டமாகவும் நடைபெற உள்ளது.

தேர்வு நாள்:-

தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை வெளியீடு!

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுப்ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்தப்படும்.

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படும் 

ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு கோடை விடுமுறை... என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

தேர்வு நேரம்:-

1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை 10 மணி பிற்பகல் 12 மணி வரை தேர்வு நடைபெறும். 

4 மற்றும் 5-ம் வகுப்பிற்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை தேர்வு நடைபெறும்.

6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தேர்வு நடைபெறும். 

8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் 04.30 மணி வரை தேர்வு நடைபெறும்.


அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback