வால்பாறைக்கு பைக்கில் வருவதற்கு தடை காரணம் என்ன முழு விவரம் valparai bike ride ban
அட்மின் மீடியா
0
வால்பாறைக்கு பைக்கில் வருவதற்கு தடை காரணம் என்ன முழு விவரம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு வால்பாறைக்கு சுற்றுலா வந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த 77 வயது ஆண் ஒருவர் பைக்கில் சென்ற போது யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்நிலையில் வால்பாறைக்கு மோட்டார் பைக்கில் மாலை 6 மணிக்கு மேல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக கட்டுப்பாட்டை வனத்துறை விதித்துள்ளது.
அதன்படி வால்பாறை மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வாகனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இரண்டு சக்கர வாகனங்களில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் செல்ல அனுமதி கிடையாது.
Tags: தமிழக செய்திகள்
