தமிழகத்தில் ரமலான் பிறை தெரியவில்லை 2ம் தேதி முதல் நோன்பு ஆரம்பம் தலைமை காஜி அறிவிப்பு ramadan 2025
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ரமலான் பிறை தெரிவில்லை 2ம் தேதி முதல் நோன்பு ஆரம்பம் தலைமை காஜி அறிவிப்பு ramadan 2025
ரமலான் மாதத்திற்கான பிறை இன்று தென்படாததால் ஷஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்ய முடிவு
மார்ச் 2ம் தேதி முதல் ரமலான் மாதத்தின் முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி டாக்டர் சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவிப்பு
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அளிக்கப்படும் இலவச சஹர் உணவு முழு விவரம் Free Sahar Food at Tamilnadu | Free Sahar Food available Tamil Nadu
https://www.adminmedia.in/2025/02/free-sahar-food-at-tamilnadu-free-sahar.html
முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய குர் ஆன் அருளப்பட்டது.
இந்த மாதங்களில் இஸ்லாமியர்கள் நோன்பை கடை பிடிப்பார்கள். ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப் பிடிக்கப்படும். ரமலான் மாத இறுதியில் பண்டிகை கொண்டாடப்படும்
இந்நிலையில் இன்று மாலை ரமலான் பிறை தென்படவில்லை என தலைமை காஜி அறிவித்துள்ளார். அதன்படி ரமலான் நோன்பு நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்
ஷரியத் அறிவிப்பு
ஹிஜ்ரி 1446 ஷாபான் மாதம் 29ம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28-02-2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 02-03-2025 தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் ஷபே கத்ர் 27-03-2025 மற்றும் 28-03-2025 வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களின் மத்தியிலுள்ள இரவில் ஆகும்.
நோன்பு:-
நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். பிறை கணக்குபடி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பார்கள்
நோன்பு நேரத்தில் உணவு உண்ணாமல், நீர் பருகாமல் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். அதன்பிறகு மாலை நோன்பு கஞ்சி சாப்பிட்டு நோன்பை முடிப்பார்கள்.
Tags: மார்க்க செய்தி

