மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ராஜினாமா முழு விவரம் Manipur CM N Biren Singh resigns
மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ராஜினாமா முழு விவரம் Manipur CM N Biren Singh resigns
மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக குக்கி மற்றும் மைத்தி ஆகிய 2 இன மக்கள் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுவிட்டனா். மேலும் பலர் மாயமாகிவிட்டனா். இந்த வன்முறையால் மணிப்பூர் மாநிலமே தீப்பற்றி எரிகிறது.
இதனை தடுக்க பாஜக அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன
இந்நிலையில் மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லாவிடம் ராஜினாமா கடிதத்தை பிரேன் சிங் வழங்கினார். மணிப்பூர் மக்களுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்த மத்திய அரசுக்கு நன்றி என்று பிரேன் சிங் கூறியுள்ளார்.
மணிப்பூரில் ஒன்றை ஆண்டுகளாக வன்முறை நீடித்து வரும் நிலையில், மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகளும் வலியுறுத்தி வந்தநிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மெய்தி மறும் குக்கி இன மக்கள் இடையே நடைபெறும் வன்முறையில் பலரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
