ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகருக்கு மூளை பக்கவாதம் ஏற்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதி Mahant Satyendra Das
Head priest of Ram temple in Ayodhya critical after brain stroke அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் 85 வயதான மஹந்த் சத்யேந்திர தாஸ், சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (SGPGI) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஸ்ரீ சத்யேந்திர தாஸ் அவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தமும் உள்ளது எனவும் ஞாயிற்றுக்கிழமை SGPGI மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நரம்பியல் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி நகரின் நியூரோ சென்டரின் மருத்துவர் அருண் குமார் சிங்
சத்யேந்திர தாஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மூளையின் பல பகுதிகளில் பரவியிருப்பது தெரியவந்தது.
மேலும் அவரை லக்னோ பிஜிஐ மருத்துவமனைக்கு அவரை மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது அங்கு அவர் சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற முடியும் என்று கூறினார்.
டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கோயிலின் பூசாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
