Breaking News

FREE FIRE கேமிற்க்கு அடிமையான சிறுவனை கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி ஈரோட்டில் இருந்து உத்திரபிரதேசம் சென்ற சிறுவனை மீட்ட போலீசார்

அட்மின் மீடியா
0

FREE FIRE கேமிற்க்கு அடிமையான சிறுவனை கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி ஈரோட்டில் இருந்து உத்திரபிரதேசம் சென்ற சிறுவனை மீட்ட போலீசார்

ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தில் வசித்து வரும் மோகன்லால் என்பவரது மகன் 17 வயது ஓம்பிரகாஷ். இவர் பள்ளிக்கு சென்று படிக்காமல் எப்பொழுதும் மொபைல் போனில் ஃப்ரீ பயர் கேம் விளையாடி அதற்க்கு அடிமையாகி இருந்துள்ளார்

இந்நிலையில் மோகன்லால் மகனை ஈரோட்டில் உள்ள தனது உறவினர் நரேஷ் என்பரின் வீட்டிற்கு ஓம்பிரகாஷை அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் அங்கு வந்த சிறுவனும் தொடர்ந்து சொல்பேச்சை கேட்காமல் எப்பொழுதும் ஆன்லைனில் விளையாடிக் கொண்டே இருந்ததால் அந்த சிறுவனின் செல்போனில் பழுது ஏற்பட்டது. 

இந்நிலையில் மொபைல்போனை சரிசெய்து கொடுத்தால் மீண்டும் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பான் என நினைத்து அதனை உறவினர் நரேஷ் சரிசெய்து கொடுக்காமல் இருந்துள்ளார். 

இதனால் அந்த சிறுவன் கோபித்துக்கொண்டு ஜனவரி 30ம் தேதி அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இது குறித்து காவல்நிலையத்தில் ஓம்பிரகாஷ் காணவில்லை என நரேஷ் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வீட்டிற்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த சிறுவன் சங்ககிரி வரை நடந்தே சென்றது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து பழுதான செல்போனை விற்பனை செய்து அதன்மூலம் கிடைத்த பணத்தை வைத்து பெங்களூருக்கு பேருந்திலும் அங்கிருந்து உத்திரபிரதேசத்திற்கு ரயிலிலும் சென்றுள்ளார். 

பின்னர், அங்குள்ள சாமியார் ஆசிரமத்தில் தங்கியிருந்தான். அதனை கண்டறிந்து காவல்துறையினர் உதவியுடன் சிறுவனை மீட்டு ஈரோடு அழைத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback