தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் Delhi Exit Poll 2025
அட்மின் மீடியா
0
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குப்பதிவுக்குகான பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக தான் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளன. இது ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற இடங்களுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது இதில் 36 இடங்களில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாஜக 68 இடங்களிளும் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகிறது.
NDTV கருத்துக்கணிப்பு
பாஜக 35 – 40 இடங்களில் முன்னிலை பெறும்
ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி 32 – 37 இடங்களில் முன்னிலை பெறும்
Times Now வின் கருத்துக்கணிப்பு
பாஜக 37 – 43 இடங்களில் முன்னிலை பெறும்
ஆம் ஆத்மி 32 – 37 இடங்களில் முன்னிலை பெறும்
காங்கிரஸ் 0 – 2 இடங்களில் முன்னிலை பெறும்
ரிபப்ளிக் கருத்துக்கணிப்பு
ஆம் ஆத்மி 10 – 19 இடங்களில் முன்னிலை பெறும்
பாஜக 35 – 40 இடங்களில் முன்னிலை பெறும்
காங்கிரஸ் 0 – 1 இடங்களில் முன்னிலை பெறும்
CNN கருத்துக்கணிப்பு
பாஜக 44 இடங்களில் முன்னிலை பெறும்
ஆம் ஆத்மி 26 இடங்களில் முன்னிலை பெறும்
மேட்ரிஸ் கருத்துக்கணிப்பு
பாஜக 35 – 40 இடங்களில் முன்னிலை பெறும்
ஆம் ஆத்மி 32 – 37 இடங்களில் முன்னிலை பெறும்
காங்கிரஸ் 0 – 1 இடங்களில் முன்னிலை பெறும்
பி-மார்க் கருத்துக்கணிப்பு
பாஜக 39 – 49 இடங்களில் முன்னிலை பெறும்
ஆம் ஆத்மி 39 – 49 இடங்களில் முன்னிலை பெறும்
காங்கிரஸ் 0 – 1 இடங்களில் முன்னிலை பெறும்
இந்துஸ்தான் டைம்ஸ் கருத்துக்கணிப்பு
பாஜக 51 -60 இடங்களில் முன்னிலை பெறும்
ஆம் ஆத்மி 10-19 இடங்களில் முன்னிலை பெறும்
சாணக்யா கருத்துக்கணிப்பு
பாஜக 39-44 இடங்களில் முன்னிலை பெறும்
ஆம் ஆத்மி 25-28 இடங்களில் முன்னிலை பெறும்
காங்கிரஸ் 2-3 இடங்களில் முன்னிலை பெறும்
பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் பாஜக-க்கு முன்னிலை காட்டினாலும் தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8, 2025 அன்று அறிவிக்கப்படும்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
