அமீரகத்தில் ரமலான் பிறை பார்த்தால் தெரிவிக்கவேண்டிய தொடர்பு எண் அறிவித்த பிறை பார்க்கும் கமிட்டி Crescent Moon Sighting
பிப்ரவரி 28 மாலை அமீரகத்தின் 🇦🇪 Fatwa கவுன்சில் ஏற்பாடு செய்த The Ramadan Crescent Moon Sighting Committee-க்கு பிறை பார்த்தால் 027774647 என்ற எண்ணையோ அல்லது https://forms.office.com/r/CwAUg1buUP என்ற இணைய இணைப்பையோ பயன்படுத்தி தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ரமலான் பிறை பார்வைக் குழு பிப்ரவரி 27 வியாழக்கிழமை, அபுதாபியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அல் ஹோஸ்ன் தளத்தில் தனது கூட்டத்தை பிப்ரவரி 28 வெள்ளிக்கிழமை நடத்தப்போவதாக அறிவித்தது.
வெள்ளிக்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு சந்திரன் காணப்பட்டால், ரமலான் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும். அதேசமயம், பிறை தெரியவில்லை என்றால், புனித மாதம் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் எனவும்
பிப்ரவரி 28 அன்று பிறையை பார்க்க பொதுமக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அழைப்பு விடுத்துள்ளது.
ரமலான் பிறை பார்ப்பவர்கள் 027774647 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்
அல்லது https://forms.office.com/r/CwAUg1buUP என்ற இணைப்பு வழியாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துள்ளது.
அமீரகத்தை போன்றே, சவூதி அரேபியாவிலும் இருக்கக்கூடிய பிறை பார்க்கும் குழு, பிப்ரவரி 28, வெள்ளிக்கிழமை மாலை ரமலான் பிறையைப் பார்க்கலாம் என்று குடியிருப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்
