Breaking News

காதலிப்பதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றி பணம் நகை மோசடி செய்த நபர் கைது

அட்மின் மீடியா
0

காதலிப்பதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றி பணம் நகை மோசடி செய்த நபர் கைது

சென்னை, தாம்பரம் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 30 லட்சம் ரூபாய் பணம், 15 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டதோடு, தனிமையில் இருந்த வீடியோவை காட்டி மிரட்டுவதாக பெண் அளித்த புகாரில் தமிழரசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் , செம்பாக்கம், திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன் என்பவர் தனியார் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு சட்ட படிப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

மேலும் லியாஸ் தமிழரசன் பல இடங்களுக்கு அந்தப் பெண்ணை அழைத்து சென்று பல முறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த பெண்ணிடம் இருந்து சிறுக, சிறுக பணமாக சுமார் 20 லட்சமும், நகையாக சுமார் 20 சவரனும் பெற்றுள்ளார்.

லியாஸ் தமிழரசனிடம் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது லியாஸ் தமிழரசன் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண் லியாஸ் தமிழரசன் மீது சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாஜக நிர்வாகி என செய்தி பரவிய நிலையில் மறுப்பு  

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ரகுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

10.02.2025, திங்கட்கிழமை அன்று, பத்திரிக்கைளிலும், தொலைக்காட்சிகளிலும், சென்னை, செம்பாக்கம் பகுதியை சேர்ந்த, லியாஸ் தமிழரசன் (வயது 25) என்பவர் பெண்களை ஏமாத்தி மிரட்டல் விடுத்ததாகவும் அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பாரதிய ஜனதா இளைஞரணியை சார்ந்தவர் என்று தவறான தகவல் வெளிவந்துள்ளதை அறிந்தேன். 

அவர் பாரதிய ஜனதா இளைஞரணியை சார்ந்தவர் இல்லை என்பதும், அவர் எங்கள் அதிகார பூர்வ எந்த பதிவேடுகளிலும் அவர் பெயர் இல்லை என்பதும் அவர் அடிப்படை உறுப்பினராகவும் இல்லை என்பதை இதன் மூலம் மறுப்பு தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தந்தை R.ஏழுமலை செம்பாக்கம் பகுதி தி.மு.க கழக நிர்வாகி என்பதையும், தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback