Breaking News

ஓடும் ரயிலில் ஏற முயன்று ரயிலுக்கும் பிளாட்பார்ம் இடையே சிக்கிக் கொண்ட நபர் - காப்பாற்றிய ரயில்வே போலீஸ் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று பிளாட்பார்ம் இடையே சிக்கிக் கொண்ட நபரை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்



திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே  தலைமைக் காவலர் செல்வக்குமார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் எஸ்எம்விடி எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலையில் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது, அவர் நிலை தடுமாறி நடைமேடைக்கும், ரயில் பெட்டிக்கும் இடையில் தவறி விழுவதை பாதுகாப்புப் பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் செல்வக்குமார் தவறி விழுந்த ஆண் பயணியை மீட்டார்  

விசாரனையில் மேற்குவங்க மாநிலம், மால்டா டவுன், பாலூர்காட் பகுதியைச் சேர்ந்த உப்லவ் மேத்தா (45 ) என்பது தெரியவந்தது.இந்நிலையில் சம்பவம் பதிவான சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. One passenger, lost his balance while attempting to board the moving train and fell down at Jolarpettai Rly Stn. Shri Selvakumar, HC/JTJ, swiftly intervened and pulled him to safety, preventing a fatal incident.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்;-

https://x.com/adminmedia1/status/1886387894383952079

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback