Breaking News

டெல்லி சட்ட மன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம் என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற இடங்களுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது இதில் 36 இடங்களில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.  இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியும்  காங்கிரஸ் கட்சியும் தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாஜக 68 இடங்களிளும் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்திலும் போட்டியிட்டது 

இதில் 27 ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது  பாஜக ஆம் ஆத்மி, காங்கிரஸ் தோல்வியடைந்தது



ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம் என்ன:-

ஆம் ஆத்மி கட்சி தான் கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருக்கிறது. இதுவே மக்கள் மத்தியில் ஓர் அதிருப்தியாக பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. 

ஊழலுக்கு எதிரான பிரசாரத்தில் அன்னா ஹசாரேவுடன் கைகோர்த்து மிஸ்டர் கிளீன் என்ற பிம்பத்துடன் டெல்லியில் ஆட்சியை அமைத்த அரவிந்த் கெஜ்ரிவால் மீதே ஊழல் குற்றச்சாட்டு விழுந்தது. 

இது ஆம் ஆத்மி மீது அதிருப்தி அலையை ஏற்படுத்தியாக கூறப்படுகிறது.

டெல்லியில் கடந்த 2021 ல் புதிய மதுபான கொள்கை கொண்டு வரப்பட்டது. இதில் ஆம் ஆத்மி தலைவர்கள் பணம் வாங்கியதாக புகார் எழுந்தது.

சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதில் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், ராஜ்யசபா எம்பியான சஞ்சய் சிங், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுமக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மீதான நம்பிக்கை குறைந்தது. 

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback