தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நியமனம்- விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம். 2005, பிரிவு 17(1)ன்படி, மாநிலத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம் செய்ய வேண்டி, ஆணையத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தேவையான தகுதி விவரங்கள் https://www.tn.gov.in/dept_profile.php?dep_Id=MzA= (Social Welfare and Women Empowerment Department) என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு அதற்காக அமைந்த படிவத்தில் புகைப்படத்துடன் (passport size) 20.03, 2025 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம். (தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்)
செயலர். தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம். நெ.183/1,ஈ.வே.ரா. பெரியார் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10.
முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பசிசீலிக்கப்படமாட்டாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.
Tags: தமிழக செய்திகள்
