Breaking News

கும்பமேளா செல்ல ரயிலில் இடம் கிடைக்காததால் ரயிலின் ஏசி கோச் கண்ணாடியை உடைத்து இடம் பிடித்த மக்கள் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இன்று (பிப். 12) மாகி பௌா்ணமி சிறப்பு புனித நீராடல் நடைபெறுகிறது. 


இந்நிலையில், பிரயாக்ராஜ் வழியாக டெல்லி நோக்கி செல்லும் சுதந்திரதா சேனானி விரைவு ரயில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு மதுபானி ரயில் நிலையத்தை அடைந்தது."ரயிலின் பொது மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பயணிகளால் ஏற்கெனவே நிரம்பியிருந்தன. 

ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தும் ரயிலில் ஏற முடியாததால் விரக்தியடைந்த பயணிகள், ஏசி பெட்டிக்குள் நுழைய முயன்றனர். அப்பெட்டிகளின் கதவுகள் திறக்கப்படாததால், கண்ணாடிகளை உடைத்து பயணிகள் ஏற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் எடுத்த விடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/AG_knocks/status/1889007238964191232

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback