Breaking News

அதிமுக உட்கட்சி விவகாரங்களை விசாரித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளலாம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

அதிமுக உட்கட்சி விவகாரங்களை விசாரித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளலாம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணை தடையை நீக்கக் கோரிய வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் விதிக்கப்பட்ட தடையை நீக்கி  எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனு அளித்தும் இதுவரையிலும் எந்த பதிலும் இல்லை. எனவே, இதுதொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். 

அந்த வழக்கில் சூர்யமூர்த்தியின் மனு குறித்து தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும். பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும்” என உத்தரவிட்ட்டிருந்தது

சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல் சூரியமூர்த்தி ஒருமனுத் தாக்கல் செய்தார். அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் உட்பட அனைத்து தரப்பின் கருத்துகளை கேட்க கோரியிருந்தார் சூரியமூர்த்தி. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பாக 4 வாரங்களில் முடிவெடுக்க கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது.

இந்த தடையை நீக்கக்கோரி முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் எம்பி யுமான ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி தரப்பில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர். 

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணை தடையை நீக்கக் கோரிய வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் விதிக்கப்பட்ட தடையை நீக்கி  எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback