இசிஆரில் காரில் பெண்களை துரத்தியது ஏன் கைதான சந்துரு பரபரப்பு வாக்குமூலம்!
இசிஆரில் காரில் பெண்களை துரத்தியது ஏன் கைதான சந்துரு பரபரப்பு வாக்குமூலம்!
சென்னை அடுத்த கானாத்தூரில் நள்ளிரவில் பெண்களின் காரை துரத்திய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் சந்தோஷ், தமிழ் குமரன், அஷ்வின், விஷ்வேஸ்வர், சந்துரு ஆகிய ஐந்து பேரை கானாத்தூர் போலீசார் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் முக்கிய நபரான சந்துரு வாக்குமூலம் அளிக்கக்கூடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில்
டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ளேன். பெண்கள் சென்ற காரை மடக்கியது நான் தான் ஏற்கனவே மொபைல் ஷாப் வைத்திருந்தேன். அதில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் அப்போது ஒரு முறை சிறைக்கு சென்றேன்.
இதனையடுத்து கார், பைக் விற்பனை செய்து வந்தேன் அப்போது கடத்தல் வழக்கு ஒன்றிலும் எனது பெயர் சிக்கியது. இதன் காரணமாக சிறைக்கு செல்ல நேரிட்டது.
ஈசிஆர் சம்பவத்தின் போது காரை ஓட்டிச் சென்றது பெண்களை மடக்கிது எல்லாமே நான்தான். சந்தோஷ் என்பவர் சொன்னதன் காரணமாகவே காரை துரத்தினோம். கார் இடித்து விட்டு சென்றதாக சந்தோஷ் தெரிவித்தார். காரை இடித்ததை நான் கண்ணால் கூட பார்க்கவில்லை. காரை இடித்து விட்டார்கள் வண்டியை பிடி எனக் கூறினார்கள். அதனால் தான் காரை பின் தொடர்ந்தேன். காரை முன் நின்று மறித்தேன். ஆனால் அவர்கள் நிற்க மாட்டேன் என்று புறப்பட்டு விட்டார்கள்.
அப்போதுதான் அவர்கள் வீடியோ எடுத்தார்கள். தொடர்ந்து அவர்கள் தங்கள் வீட்டிற்கு திரும்பி விட்டார்கள் வீட்டிற்குள் சென்று சந்தோஷ் பேசினார். அதற்குப் பின்பாக நான் பிடிக்கச் சொன்ன கார் இது இல்லை என கூறினார்
என்னை மன்னிப்பு கேட்க சொன்னார். நானும் மன்னிப்பு கேட்டேன். போலீசிடம் செல்வதாக கூறினார்கள். போலீஸ் வந்தால் எங்கள் என்னை கொடுங்கள் என்று கூறிவிட்டு நாங்கள் சென்று விட்டோம். நான் எந்த கட்சியிலும் இல்லை. எங்க வீட்டில் எங்க தாத்தாவும், எங்க அம்மா கூட பிறந்த அண்ணனும் அதிமுகவில் தான் இருக்காங்க.எங்கள் தாத்தா எம்ஜிஆரிடம் டிரைவராக இருந்துள்ளார். எங்களுடன் காரில் வந்த மற்றவர்களை எனக்கு தெரியாது. இரண்டு நபர்கள் மட்டுமே இரண்டு முறை பார்த்து உள்ளேன். டோல்கேட்டில் பணம் வசூலிப்பதை தவிர்ப்பதற்காகவே காரில் கொடியை அணிந்து சென்றதாகவும் சந்துரு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்
