கோயிலில் பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது உண்டியலில் செலுத்த வேண்டும் - செயல் அலுவலர் சுற்றறிக்கை
மதுரை பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது. உடனுக்குடன் அவற்றை உண்டியலில் செலுத்த வேண்டும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கோயில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கையால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி
மதுரை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் கட்டுப்பாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள நேதாஜி ரோட்டில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுத சுவாமி கோவில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாலதண்டாயுத சுவாமி திருக்கோவில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்
அந்த அறிக்கையில்
மதுரை நகர், நேதாஜி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கையினை உண்டியலில் செலுத்த உத்திரவிடப்படுகிறது. இவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வரப்பெறும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை திருக்கோயில் மணியம் மற்றும் காவலர்கள் கவனித்தல் வேண்டும் எனவும், தட்டு காணிக்கை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்
