Breaking News

வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கூச்சலிட்டதால் கீழே தள்ளிவிட்ட நபர் கைது

அட்மின் மீடியா
0

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கூச்சலிட்டதால் கீழே தள்ளிவிட்ட நபர் கைது

கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். வேலூர் அருகே ரயில் சென்றுகொண்டிருந்த போது அந்த ரயிலில் பயணம் செய்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அந்த கர்ப்பிணி பெண் கழிவறை செல்லும் போது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என பயந்த மர்ம நபர்கள் கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல் அந்த பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதனால் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கை, காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் மற்றும் தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் ஹேமராஜ் செல்போன் பறித்த வழக்கில் 2022இல் குண்டர் சட்டத்தில் கைதானவர் என்பது குறிப்பிடதக்கது.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback