அதிமுகவில் வெடித்தது பிரச்னை இபிஎஸ் பாராட்டு விழாவை புறக்கணித்த செங்கோட்டையன் முழு விவரம்
அத்திகடவு-அவினாசி திட்ட குழு நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ படங்கள் இல்லாததால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்
கோவை மாவட்டம், அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில் அவிநாசி-அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவரும், அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பாராட்டு விழா மாநாட்டுக்கு வராதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அவர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்தது.
இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அத்திக்கடவு அவினாசி திட்டதக்குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை. நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்படாததால் அதில் பங்கேற்கவில்லை.
அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர 2011ல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார். திட்டப்பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்களே மேடையில் இல்லை” என செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுதொடர்பான அழைப்பிதழில் கூட, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாத நிலையில், எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
செங்கோட்டையன் கருத்தால் அதிமுகவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழச்செய்துள்ளது.
Tags: அரசியல் செய்திகள்
