சசிகலா, டிடிவி, நான் அதிமுகவில் இணைய எந்த நிபந்தனையும் இல்லை ஓபிஎஸ் அறிவிப்பு
சசிகலா, டிடிவி, நான் அதிமுகவில் இணைய எந்த நிபந்தனையும் இல்லை ஓபிஎஸ் அறிவிப்பு
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்
நான், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் இணைவதற்கு தயாராக உள்ளோம். எனக்கு எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. அனைவரும் இணைந்தால் அதிமுகவிற்கு வாழ்வு இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு தான் நான் உட்பட... நான் அதிமுகவில் இணைந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தால் தான் நல்லது என்று கூறுவேன்” என்றார்.
அதேபோல் தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி தெற்கு மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செயல் வீரர்களின் ஆலோசனை கூட்டத்தில்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது 2026 தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக ஒன்றிணைய வாய்ப்புள்ளது. அது With or Without எடப்பாடி பழனிசாமி என்பதை அதிமுக தொண்டர்கள் முடிவு செய்வார்கள் என்றார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
