Breaking News

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு முழு விவரம்

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணிபுரிந்த பிரசாந்த் கிஷோர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்துள்ளார். 

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலத்தில் பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, ஜான் ஆரோக்கியசாமி, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய் - பிரசாந்த் கிஷோர் இடையேயான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback