Breaking News

வேலூரில் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

வேலூரில் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்தது என்ன முழு விவரம்

வேலூரில் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து இளம்பெண்கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் தனது நிலத்தை விற்று, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சீட்டு நடத்தி வரும் அல்தாஃப் தாசினிடம் ரூ.15 லட்சத்திற்கு சீட்டு போட்டுள்ளார்

மேலும், அந்த நிறுவனத்தில் தனக்குத் தெரிந்தவர்களிடம் கூறி ரூ.1 கோடியே 75 லட்சத்திற்கு சீட்டு கட்ட வைத்துள்ளார். பின்னர் அந்த நிறுவனம் ரூ.40 லட்சத்தை வழங்கியது. மீதமுள்ள பணத்தை அந்தப் பெண் கேட்டபோது பணம் கொடுக்காமல் சாக்கு போக்கு சொல்லி வந்துள்ளனர்

இந்நிலையில் வேலூருக்கு வந்து பணத்தை வாங்க வர சொன்னதால் வேலூருக்கு வந்த பெண்ணிடம் ஹோட்டல் அறைக்கு வாங்க பணம் கொடுத்துவிடுகின்றேன் என கூறியதை நம்பி அந்தப் பெண்ணும் அவரது தாயாரும் விடுதிக்குச் சென்றனர். 

அங்கு 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கூடி, பணம் கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தது. மேலும், யாரோ ஒருவர் இளம் பெண்ணின் தாயாரை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த நேரத்தில், அல்தாஃப் தாசின், மகேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

போலீஸ்பின்னர் அவர்கள் அந்தப் பெண்ணிடம், உன்னை பாலியல் வன்கொடுமை செய்து, உன் ஆடைகளை கழற்றி, உன்னை நிர்வாணமாக்கும் வீடியோவை நாங்கள் பதிவு செய்துள்ளோம்  இதை நீ வெளியே சொன்னால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். 

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், இந்தப் புகார் தொடர்பாக 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback