Breaking News

புனே பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் பலாத்காரம் நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

புனே பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் பலாத்காரம் நடந்தது என்ன முழு விவரம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்றது அங்குள்ள புனே சுவர்கேட்டில் உள்ள பேருந்து நிலையத்துக்கு அதிகாலையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தனது சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டானுக்கு செல்ல பேருந்திற்க்காக காத்திருந்தார்.

இளம் பெண் ஒருவர் நீண்டநேரமாக காத்திருப்பதை நோட்டமிட்ட ஒருவர் அந்த பெண்ணிடம் சென்று 'சகோதரி' எங்கே செல்ல வேண்டும் என கேட்க நான் சத்தாரா செல்லவேண்டும் என கூற அதற்க்கு அந்த நபர் சத்தாரா பேருந்து இங்கே நிற்காது என்று கூறியுள்ளார்.

மேலும் பேருந்து அந்த பகுதியில் நிற்கும் என கூறி இளம்பெண்ணை பேருந்து நிலையத்தில் மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்கு (எம்.எஸ்.ஆர்.டி.சி.) சொந்தமான 'சிவ்சாகி' என்ற சொகுசு பஸ்சை காட்டி, இது தான் நீங்கள் போக வேண்டிய ஊருக்கு செல்லும் பஸ் என்று கூறியுள்ளான். 

அந்த நபர் கூறியதை நம்பி அந்த பேருந்தில் அந்த இளம்பெண் ஏறியபோது, அந்த நபர் உடனே பேருந்தின் கதவை மூடி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தப்பி ஓடி விட்டார். ஏசி பேருந்து என்பதால் ஜன்னல்கள் திறக்க முடியாத நிலையில் இருந்தன. 

உடனே தொலைபேசியில் தனது தோழியிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். தனது தோழியின் அறிவுரையின் பேரில், காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்

இது குறித்து வழக்குப்பதிவு செய்து. பஸ் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது, பலாத்கார ஆசாமியின் அடையாளம் தெரியவந்தது. அவன் புனே மாவட்டம் சிக்ராப்பூரை சேர்ந்த ராம்தாஸ் காடே (வயது36) என்பது தெரியவந்தது. அவனை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

பேருந்து நிலையத்தில் சகோதரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது, துயரமானது, கோபத்தை ஏற்படுத்துகிறது.அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம் மன்னிக்க முடியாதது. தூக்கிலிடப்படுவதைத் தவிர வேறு எந்த தண்டனையும் இதற்கு ஏற்புடையதாக இருக்காது. குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்ய புனே காவல் ஆணையரை தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback