சிபில் ஸ்கோர் குறைவாக இருந்ததால் நின்ற திருமணம் நடந்தது என்ன முழு விபரம்
சிபில் ஸ்கோர் குறைவாக இருந்ததால் நின்ற திருமணம் நடந்தது என்ன முழு விபரம்
மகாராஷ்டிராவில் மணமகனின் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்ததால், மணமகள் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
மகாராஷ்டிரா முர்திசாபூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் வரன் பார்த்துள்ளனர். இதையடுத்து இளைஞர் ஒருவரின் ஜாதக பொருத்தம் அனைத்தும் ஒத்துப்போகவே திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மணமகள் வீட்டார் மணமகனின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளனர், மேலும் அவரது பான்கார்டு வைத்து மணமகனின் 'சிபில்' ஸ்கோரை அவர்கள் கேட்டுப் பெற்றுள்ளனர்.
அதில் அந்த இளைஞரின் 'சிபில்' ஸ்கோர் குறைவாக இருந்தது மட்டுமின்றி, அவருக்கு நிறைய கடன்கள் நிலுவையில் இருந்தது பெண் வீட்டாருக்கு தெரிய வந்தது. இதன் காரணமாக பெண் வீட்டார் திருமணத்தை அதிரடியாக நிறுத்தியுள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்
