போர் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு பிப்.15 வரை கெடு மீறினால் காசாவில் நரகத்தின் வாயில்கள் திறக்கும் டிரம்ப் அறிவிப்பு
போர் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு பிப்.15 வரை கெடு மீறினால் காசாவில் நரகத்தின் வாயில்கள் திறக்கும் டிரம்ப் அறிவிப்பு
போர்:-
2023-ஆம் ஆண்டு, அக்டோபர் 7-ஆம் தேதி அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாக காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டதால் போர் வெடித்தது
இதற்கு பதிலடியாக ஹமாஸை அழிக்க இஸ்ரேல் காஸா மீது ராணுவ தாக்குதலை நடத்தியது.இந்த போரின் போது 46,500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக காஸாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், கூறுகிறது.
பேச்சு வார்த்தை:-
காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் முதல் முறையாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் பிரதிநிதிகள் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் வரும் 20-ம் தேதி பதவி ஏற்பதற்கு முன்பாக ஒப்பந்தம் அமலுக்கு வரும் என தெரிவித்தனர்மேலும் டிரம்பால் நியமிக்கப்பட்ட மத்திய கிழக்குத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் என்பவரும் கத்தாரில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.
போர் நிறுத்த ஒப்பந்தம்:-
முதல் கட்ட போர் நிறுத்தம் ஆறு வாரங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போர் நிறுத்தத்தின் போது 33 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.
இஸ்ரேலும் தங்களிடம் உள்ள சிறை கைதிகளை விடுவிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும் காசா மக்கள் தங்களின் சொந்த கிராமங்களுக்கு செல்லவும் அனுமதி வழங்கியுள்ளது.
முதற்கட்டமாக 737 சிறை கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் சிறைகளில் ஆயிரக்கான பாலஸ்தீனியர்கள் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஐந்து பணயக்கைதிகள் கைதிகள் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. கடந்த சனிக்கிழமை மூன்று பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதுவரை 33 இஸ்ரேலியர்களும், 2,000 பாலஸ்தீனிய கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் மீறிய இஸ்ரேல் ஹமாஸ் குற்றச்சாட்டு:-
ஜனவரி 19 ஆம் திகதி போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா பகுதியில் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர வேண்டிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் ராணுவம் தடுப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக, ஹமாஸ் குழுவின் தலைமை, இஸ்ரேல்படைகளின் வீதி மீறல்களையும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியதையும் கண்காணித்து வருகிறது.
வடக்கு காஸாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு செல்வதை தாமதப்படுத்துதல், காஸா முனையின் பல்வேறு பகுதிகளில் ஷெல் குண்டுகள் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் தாக்குதல் நடத்துவது, அந்த பகுதியில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கத் தவறுதல் ஆகியவை இந்த வீதி மீறல்களுள் அடங்கும்.'' என ஹமாஸ் தெரிவித்துள்ளது
ஹமாஸ் அறிவிப்பு:-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதை அடுத்து, அடுத்தக்கட்ட பணயக்கைதிகள் விடுவிப்பை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
அமெரிக்கா எச்சரிக்கை:-
இந்நிலையில், அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்,
காசாவில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகள் அனைவரும் வருகிற சனிக்கிழமை 12 மணிக்குள் விடுவிக்கப்படவில்லை எனில், போர்நிறுத்தத்தை விலக்கிக்கொள்ள நான் உத்தரவிடுவேன். அதன் பின்னர் எல்லாவிதமான மோசமான விளைவுகளும் ஏற்படும்.
இவ்வாறு காலக்கெடு விதித்திருப்பது குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் பேச இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மோசமான விளைவுகள் என்ன என்பதை திரு டிரம்ப் விரிவாகச் சொல்லாவிட்டாலும், அவை என்னவென்று ஹமாஸுக்குத் தெரியும் என்றார்.
இந்த விவகாரத்தில் அமெரிக்கப் படைகளின் தலையீடு இருக்காது என்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்,” என்றார் அவர்.
Tags: வெளிநாட்டு செய்திகள்

