Breaking News

இனி ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்கப்படும் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இனி ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள்...இனி ரேஷன் கடைகளில்.., கம்பு, திணை, சாமை, வரகு அரிசி, குதிரைவாலி உள்ளிட்ட சிறு தானியங்கள் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்

தமிழகம் முழுவதும் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற பொருட்கள் மலிவு விலையில் வாங்கி ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுகிறார்கள்.

இந்நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் சிறுதானியங்களும் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

முதல் கட்டமாக சோதனை முயற்சியாக தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய இரு மாவட்ட ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக 2 கி கேழ்வரகு வழங்கப்படுகிறது. பின்னர் விரைவில் மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டமானது தற்பொழுது பரிசோதனை முறையில் நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு அரசு மக்களினுடைய ஆரோக்கியத்தையும் உணவு முறையையும் மேம் படுத்த இந்த திட்டத்தினை செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback